புதன், 23 செப்டம்பர், 2009

There is no safety for the seniour journalist and writer that too the Tamil nadu Govt ruled by popular writer Dr.Kalaingar M.Karunanithi

விவேக் மீது போலீசில் புகார்!
கே.கே. நகரில் விவேக்குக்கு சொந்தமான வீடு உள்ளது. அதில் எழுத்தாளர் சுப்ரஜா 2005-முதல் குடியிருந்து வருகிறார். சுப்ரஜாவின் மகன் கல்லூரி படிப்பை முடிக்கும் வரை வீட்டை காலி செய்ய வேண்டாம் என்று விவேக் சொன்னதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் விவேக் தரப்பிலிருந்து வீட்டை காலி செய்ய சுப்ரஜாவுக்கு நெருக்கடி கொடுத்ததாகவும், வாடகைப் பணத்தை வாங்க மறுத்ததாகவும் போலீஸில் கொடுத்த புகாரில் கூறப்பட்டுள்ளது. மேலும், விவேக் சிலருடன் சுப்ரஜாவின் வீட்டிற்குள் புகுந்து பொருட்களை உடைத்து, வீட்டை காலி செய்ய மிரட்டி விட்டுச் சென்றதாகவும் அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சுப்ரஜா கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: நடிகர் விவேக் வீட்டில் 2005ம் ஆண்டு முதல் ரூ.7 ஆயிரத்துக்கு வாடகைக்கு குடியிருந்து வருகிறேன். கடந்த டிசம்பர் மாதம் என்னிடம் வாடகை வாங்கப்படவில்லை. இந்நிலையில் விவேக்கின் உதவியாளர் வீட்டைக் காலி செய்யும்படி மிரட்டினார். அவரும் தொலைபேசியில் மிரட்டினார். எனது வாடகையை மணி ஆர்டர் மூலம் அனுப்பினேன். அது திரும்பி வந்தது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று புகாரில் கூறப்பட்டிருந்தது. இப்புகாரின்படி கே.கே.நகர் போலீசார் விவேக்கிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த பிரச்சினை தொடர்பாக விவேக் கூறியதாவது கே.கே.நரில் உள்ள வீட்டுக்கு எனது சகோதரி வர உள்ளார். அப்பகுதியிலே அவரின் மகனை படிக்கவைப்பதே வசதியாக இருக்கும் என்றதால் 3 மாதத்துக்கு முன்பே சுப்ராஜாவிடம் வீட்டைக் காலி செய்யும்படி கூறியிருந்தேன். 3 வருடமாக அந்த வீட்டுக்கு நான் போகவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக